பிரெட் எக் மசாலா டோஸ்ட்
தேவையான பொருட்கள் :
பிரெட் – 6
முட்டை – 3
வெங்காயம் -1 பெரியது
மஞ்சள்தூள் – சிட்டிகை
மிளகாய்தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சமிளகாய் -1
கொத்தமல்லி இலை – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் / நெய் – தேவைக்கு
மல்லி சட்னி
கொத்தமல்லி கால் கப்
புதினா கால் கப்
தேங்காய் கால் கப்
புளி சிறு துண்டு ( விரும்பினால்)
பச்சமிளகாய் – 2
உப்பு தேவைக்கு
செய்முறை :
1.முதலில் மல்லி சட்னி க்கு தேவையனா பொருட்களை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறுது தண்ணீர் தெளித்து திக்காக அரைத்து தனியாக வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், மல்லி இலை, தூள் வகைகள், உப்பு கலந்து நன்றாக கரண்டி வைத்து கலந்து வைக்கவும்.
3.பிரெட் துண்டுகளை முக்கோண வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
4. பிரெட் இன் ஒரு பகுதியில் மல்லி சட்னி தடவி வைக்கவும். மறு புறம் ப்ளேன் பிரெட் வைத்து செட் ஆக ரெடி செய்து வைக்கவும்.
5. தோசை தவா வில் சிறுது எண்ணெய்/ நெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்த பின்பு ரெடி செய்து வைத்த பிரெட் செட் ஐ முட்டை கலவையில் முக்கி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
சுவையான பிரெட் எக் மசாலா டோஸ்ட் ரெடி.
குறிப்பு:
முட்டை வாடை டோஸ்ட் ல வராமல் இருக்க முட்டை கலக்கும் பொழுதே முதலில் முட்டை , மஞ்சள்தூள் கலந்து நன்றாக கலக்கவும். பிறகு மற்ற பொருட்களை சேர்ந்து கலக்கவும் .
பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும் .
Follow on my Facebook page : https://www.facebook.com/groups/322795448871598/
கருத்துகள்
கருத்துரையிடுக